முக்கியச் செய்திகள் தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த அன்பரசன் என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் விழா குழுவினர், சமூகத்தினர், காளை அல்லது மாடுபிடி வீரர் என யாருக்கும் முதல் மரியாதை  வழங்கக்கூடாது என உத்தரவிட்டனர். மேலும், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் அரசியல், சமூகம் உட்பட எவ்விதமான ப்ளக்ஸ் பேனர்களையும் வைக்கக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள்,

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஜல்லிக்கட்டு கணக்கு வழக்குகளை பராமரிப்பதற்காக தனி வங்கி கணக்கை தொடங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இதேபோல, பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழுவை மாற்றியமைக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடைசி நேரத்தில் மனுவை தாக்கல் செய்ததால், ஏற்க இயலாது எனக்கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நகைக்கடன் தள்ளுபடி குறித்து அரசு திடுக் அறிவிப்பு.

G SaravanaKumar

”பிரச்னைகளை புறந்தள்ளி விட்டு தேர்தல் வெற்றிக்கு பாடுபட வேண்டும்”- ஓ.பன்னீர்செல்வம்!

Jayapriya

விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் நடால்

Web Editor

Leave a Reply