அவசர தேவை பயன்பாட்டுக்காக கொரோனா தடுப்பு மருந்து இரண்டு வாரங்களுக்குள் தயாராகி விடும் என்று புனே மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அகமதாபாத், ஹைதராபாத், புனே இடங்களில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். இந்நிலையில் தமது நிறுவனம் தயாரித்து வரும் கோவிட் ஷீல்டு என்ற தடுப்பூசியை அவசர தேவைக்காக பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கும்படி மத்திய அரசிடம் இரண்டு வாரங்களுக்குள் அனுமதி கேட்கப்பட உள்ளதாக புனேவின் சீரம் இன்ஸ்டியூட் இந்தியா மருந்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனவல்லா கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் பின்னர் இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை விநியோகிப்பதற்கு தமது நிறுவனம் முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதன் பின்னர் இந்தியாவுடன் வெளிநாடுகள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களின் படி கொரோனா தடுப்பூசி விநியோகிப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தமது நிறுவனத்தின் தடுப்பூசி ஒரு டோஸ் கொடுத்தால் அது 90 சதவீதம் அளவுக்கு பாதுகாப்பை தரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.