முக்கியச் செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: ரவுண்ட் அப்

மதுரை அலங்காநல்லூரை அதிரவைத்த ஜல்லிக்கட்டு போட்டியில், 12 காளைகளை அடக்கிய விராட்டிபத்து வீரர் கண்ணனுக்கு முதல்பரிசாக கார் வழங்கப்பட்டது.

உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி, காலை 9 மணிக்கு வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது. காளைகளை அடக்க செல்லும் முன்பாக, ஆட்சியர் அன்பழகன் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உலகமே வியக்கத்தக்க அளவிற்கு பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை தமிழகத்தில் நடத்த வழி வகுத்துக் கொடுத்தது அதிமுக அரசுதான் என பெருமிதம் தெரிவித்தார். களத்திற்கு மாடுபிடி வீரர்களுக்கு அவர் வாழ்த்துகளை கூறினார்.

தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழ் மண்ணின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்துவதற்கு அதிமுக ஆற்றிய பணிகளை எடுத்துரைத்தார். ((ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான உரிமையை போராடி பெற்று தர உறுதுணையாக இருந்த மக்கள் அனைவருக்கும் துணை முதல்வர் நன்றி தெரிவித்தார்.இதனையடுத்து முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இணைந்து கொடியசைத்து ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடங்கி வைத்தனர்.

பாரம்பரிய முறைப்படி முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதை அடுத்து, அவிழ்த்துவிடப்பட்ட மற்ற காளைகள், வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன.எட்டு சுற்றுகளாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், ((674 )) 670க்கும் மேற்பட்ட காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. விராட்டிபத்து பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற மாடுபிடி வீரர், 12 காளைகளை அடக்கி முதலிடத்தை தட்டிச்சென்றார். அவருக்கு முதற்பரிசாக கார் வழங்கபபட்டது.

இப்போட்டியில் 9 காளைகளை அடக்கி 2ம் இடம் பிடித்த கருப்பணனுக்கு இருசக்கர வாகனம் மற்றும் 2 கறவை மாடுகள் பரிசாக வழங்கப்பட்டன. 8 காளைகளை அடக்கிய சக்தி என்ற மாடுபிடி வீரருக்கு ஒரு சவரன் நகை வழங்கப்பட்டது.

யாருக்கும் பிடிபடாமல், களத்தில் நின்று விளையாடியதற்காக குருவித்துறை சந்தோஷ் என்பவருக்குச் சொந்தமான காளை, முதலிடம் பிடித்தது. இதனையடுத்து சந்தோஷ்க்கு முதற்பரிசாக கார் வழங்கப்பட்டது.

இப்போட்டிகளை பார்வையிட்ட மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதை தமிழக அரசு பரிசீலனை செய்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.ஜல்லிக்கட்டின் போது மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என சுமார் 50 பேர் காயம் அடைந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இ.பி.எஸ் முதலமைச்சராவதை யாராலும் தடுக்க முடியாது -எஸ்.பி.வேலுமணி

EZHILARASAN D

இலங்கை கடற்படையால் துப்பாக்கி முனையில் மீனவர்கள் கைது!

Web Editor

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; அறநிலையத்துறை ஆணையருக்கு அபராதம்

G SaravanaKumar

Leave a Reply