தமிழகம்

அரையாண்டு தேர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்! – அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது குறித்து ஐந்து நாட்களுக்குள் அரசாணை வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிச்செட்டிபாளையம் அருகே குருமந்தூரில் தொடக்க வேளாண்மை கடன் சங்கம் மூலம் பயனாளிகளுக்கு கடன் உதவிகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்:

பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் அரையாண்டுத் தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் என்று கூறப்படுவது தவறான தகவல். ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்வது குறித்து முதல்வரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு முடிவு எடுக்கப்படும். கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் மீதான சுமையைக் குறைக்கும் வகையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதற்கான அரசாணை 5 நாட்களுக்குள் வெளியிடப்படும். சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் தொடங்குவது குறித்து கட்சியின் உயர்மட்ட குழு கூடி முடிவு எடுக்கும். என்று குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Leave a Reply