மது அருந்த பணம் இல்லாததால் சிறுவனின் வெள்ளி அரைஞாண் கயிறுக்காக அவனை கடத்தி நீரில் மூழ்கடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கணபதி, சித்ரா தம்பதியனர். இவர்களுக்கு 11 வயதில் ஆண் குழந்தையும் 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். சித்ராவின் தந்தை வேலு என்பவர் இவர்களது வீட்டில் வசித்து வருகிறார். வேலுவின் நண்பரான பாலன் என்பவர் மது அருந்திவிட்டு ஊர் சுற்றுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் கணபதியும், சித்ராவும் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் தெருவில் விளையாடி கொண்டிருந்த 11 வயது சிறுவனை பாலன் அழைத்து சென்றுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று சிறுவனின் அரைஞாண் கயிற்றினை அறுக்க முயற்சித்துள்ளார். அப்போது சிறுவன் அவரிடமிருந்து தப்பிக்க முயன்ற போது பாலன் அங்குள்ள நீரில் சிறுவனை மூழ்கடித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது மயங்கிய நிலையில் இருந்த சிறுவன் இறந்து விட்டதாக நினைத்து வெள்ளி அரைஞாண் கயிற்றினை அறுத்து கொண்டு தப்பியோடியுள்ளார்.
சிறுவனுக்கு மயக்கம் தெளிந்ததை அடுத்து தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளான்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சிறுவன் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.