அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும், என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள சாவக்காட்டு பாளையத்தில், மினி கிளினிக்கை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தாண்டு, பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிப்பது குறித்து, முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், மருத்துவ படிப்பில் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும், என்றும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்