தமிழகம்

அரசியலுக்கு வருவேன்: பார்த்திபன் அதிரடி

எதிர்காலத்தில் நிச்சயமாக அரசியலுக்கு வருவேன் என இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தியத் திரைப்பட விழா, அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் கடந்த 2019ம் ஆண்டிற்கான சிறந்த படமாக “ஒத்த செருப்பு அளவு 7” என்கிற தமிழ் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருதினை இயக்குனர் பார்த்திபனுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி வழங்கினார். விருதுக்கான பாராட்டு பத்திரத்துடன் 1 லட்சம் ரூபாய் ரொக்க பரிசுக்கான காசோலையை வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் வழங்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து விழாவில் பேசிய பார்த்திபன் பல திரைப்படங்கள் தோல்விகள் அடைந்தாலும் ரசிகர்களின் ரசனை காரணமாக ஒத்த செருப்பு போன்ற படத்தை எடுக்க முடிந்ததாக கூறினார். புதுச்சேரியில் ஷூட்டிங் கட்டணம் தற்போது அதிகமாகிவிட்டதாகவும், அதனைக் குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிறப்பான ஆட்சி தருவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது எனக்கூறினார். தானும் எதிர்காலத்தில் நிச்சயமாக அரசியலுக்கு வருவேன் எனவும் பார்த்திபன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“பயமா இருக்கா, இதுக்கு அப்புறம் இதவுட பயங்கரமா இருக்கும்” – வீரராகவன் எனும் விஜய்

G SaravanaKumar

திமுகவின் பொங்கல் பரிசு ஒரு ஏமாற்று வேலை- அண்ணாமலை

Jayasheeba

“1.4 கோடி முதியவர்களில் இதுவரை 47 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்” – ராதாகிருஷ்ணன்

Halley Karthik

Leave a Reply