அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காததே மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவக் காரணம் என ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் கடந்த சில நாட்களில் 104 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஐஐடி வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் மற்றும் ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, உணவுக் கூடம் வழியாக கொரோனா தொற்று பரவியதாகவும், மாணவர்கள் மற்றும் உணவுக் கூடத்தில் பணி புரிபவர்கள் என பலருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மாணவர்கள் முறையாக கடைப்பிடிக்காததே நோய் பரவலுக்கு காரணம் என ஐஐடி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்