ஆசிரியர் தேர்வு இந்தியா

அரசின் யோசனை குறித்து விவசாயிகள் சங்க தலைவர்களிடம் இருந்து இதுவரை பதில் இல்லை – மத்திய வேளாண் அமைச்சர்

வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வது என்ற, அரசின் யோசனை குறித்து விவசாயிகள் சங்க தலைவர்களிடம் இருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேளாண் சட்டங்களில் அரசு மேற்கொள்ள விரும்பும் திருத்தங்கள் குறித்த மசோதா, விவசாய சங்க தலைவர்களின் பரிசீலனைக்கு கடந்த புதன்கிழமை அனுப்பப்பட்டதாகக் கூறினார். இதற்கு அவர்களின் பதில் இதுவரை அரசுக்கு கிடைக்கவில்லை என்றும், அவர் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அரசின் யோசனையை விவசாயிகள் சங்க தலைவர்கள் நிராகரித்திருப்பது குறித்த தகவல், ஊடகங்கள் மூலம்தான் தங்களுக்கு கிடைத்திருப்பதாக நரேந்திர சிங் தோமர் கூறினார். விவசாய சங்கத் தலைவர்கள் விரும்பினால், சட்டத் திருத்தம் தொடர்பாக, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்தாகவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பரந்தூரில் அமைகிறது இரண்டாவது விமான நிலையம் – முதலமைச்சர் அறிவிப்பு

Dinesh A

“என்னில் சிறந்த பாதி சுஷ்மிதா”- இணையத்தை கலக்கும் லலித் மோடி

G SaravanaKumar

திடீர் சரண்டர்: குறை தீர்க்கும் அதிகாரியை நியமித்தது ட்விட்டர்!

EZHILARASAN D

Leave a Reply