புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை மறு பரிசீலனை செய்யக்கோரி, முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.
புதுச்சேரி அரசு, மக்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கியது. இதை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை ஒட்டியுள்ள புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு, அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வர வாய்ப்புள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால், கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது என்றும், எனவே, புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அனுமதியை, புதுச்சேரி அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, அரசின் அன்றாட நிகழ்வுகளில் ஆளுநர் தலையிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது உள்ள பொருளாதார சூழலில் பெரும்பாலான மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கவில்லை.
புதுச்சேரி ஒரு சுற்றுலா நகரம் இங்கு பிரெஞ்ச் கலாச்சாரத்தை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள், பல ஆண்டுகளாக பின்பற்றிவரும் இந்தக் கொண்டாட்டங்கள் கொரோனாவை காரணமாக வைத்து தவிர்க்க முடியாது.
கொரோனா காலத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று மக்களை சந்தித்தோம் ஆனால் இது நாள் வரை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியே வராமல் பாதுகாப்பாக உள்ளார்.
அடிப்படைகள் தெரியாமல் பிறருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுரை கூற கூடாது என்றும் பதிலளித்துள்ளார்.