தமிழகம்

“அமைச்சர்கள் மீது, திமுக புகார் அளித்திருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது” – அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக அமைச்சர்கள் மீது, திமுக புகார் அளித்திருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளதாக, அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் ஒளிப்பதிவாளர்களுக்கு பாராட்டு விழா நடத்தும் நிகழ்ச்சியில், அவர் கலந்து கொண்டார். இதில், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்கள் 4 பேருக்கு, பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நாடு முழுவதும் பேசப்பட்டதாக தெரிவித்தார். தமிழரின் அவமான சின்னமாக திமுகவும், ஆ.ராசாவும் இருப்பதாக சாடிய அவர், திமுகவில் உள்ளவர்கள் ஊழல் செய்துவிட்டு மற்றவர்கள் மீது பழிபோடுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளதாக தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆதிச்சநல்லூரில் பானை ஓடுகள், எலும்புகள் கண்டுபிடிப்பு

EZHILARASAN D

ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

Halley Karthik

காய்கறி வேண்டுமா? இந்த எண்ணுக்கு அழையுங்கள்!

Leave a Reply