விளையாட்டு

’அந்த மனசுதான் சார்’ … ஹர்திக் பாண்டியாவை கொண்டாடும் ரசிகர்கள்!

சிட்னியில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. மேத்யூ வேட் 53 பந்தில் 80 ரன்களும், மேக்ஸ்வெல் 36 பந்தில் 54 ரன்களும் அடித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்து வந்த விராட் கோலி 61 பந்தில் 85 ரன்கள் அடித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழ்ந்தனர். இதனால் இந்திய அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களே அடிக்க முடிந்தது.இதனால் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதால் இந்தியா தொடரை கைப்பற்றியது

https://twitter.com/hardikpandya7/status/1336296682401644547.

இந்நிலையில் போட்டியின் தொடர் நாயகன் விருது ஹர்திக் பாண்டியாவிற்கு வழங்கப்பட்டது. விருதை பெற்ற பாண்டியா அதனை தமிழக வீரர் நடராஜனிடம் வழங்கி, இந்த விருது உங்களுக்குதான் பொருத்தமானது என கூறியுள்ளார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் ”இந்திய அணியில் உனது தொடக்கம் உன் கடின உழைப்பு தொடர்ந்து பேசப்படும்” என குறிப்பிட்டுள்ளார். வெற்றி கோப்பையை பெற்ற கோலி அதனை ஹர்திக் பாண்டியாவிடம் வழங்கி ஊக்கப்படுத்தினார். தற்போது ஹர்திக் பாண்டியாவின் பெருந்தன்மையான செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனாவிலிருந்து மீண்டு வந்த ரோகித்!

Web Editor

டி20 உலக கோப்பை; இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

G SaravanaKumar

யு20 உலக தடகள சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்ற தமிழக வீரருக்கு அண்ணாமலை வாழ்த்து

Web Editor

Leave a Reply