தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் விபத்து!
தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொப்பூர் கணவாயில், சேலம் நோக்கி வந்த கார் விபத்துக்குள்ளானதால், வாகனங்கள் வரிசையாக நின்றன. இந்நிலையில் சேலம் நோக்கி அதிக வேகமாக வந்த லாரி ஒன்று, வரிசையாக நின்ற வாகனங்கள் மீது மோதியது. இதன் காரணமாக 12 கார்களும், ஒரு மினி லாரி உள்ளிட்ட 15 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதின. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமுற்ற 5-க்கும் மேற்பட்டோரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அடுத்தடுத்து 15 வாகனங்கள் விபத்துக்குள்ளனாதில், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த விபத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது
இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் புட்புதினை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விபத்து நடைபெற்ற பகுதியில் உயர்கல்விதுறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வரும் காலங்களில் விபத்து ஏற்படாமல் தவிர்க்க, வலைவான தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கவும் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட இருப்பதாக தெரிவித்தார்.