முக்கியச் செய்திகள் தமிழகம்

”அதிமுக எஃகு கோட்டையாக உள்ளது”- அமைச்சர் ஜெயக்குமார்!

அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும், அதிமுக கூட்டணியில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள அதிமுக பிரச்சார தொடக்க பொதுக்கூட்ட ஏற்பாடுகளை அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக வெற்றி இயக்கம் என்றும், அதிமுக எஃகு கோட்டையாக உள்ளது என்றும் தெரிவித்தார். அதிமுக தலைமையில்தான் கூட்டணி என தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், அதை மீறி எதுவும் நடக்காது, இதை 100 முறை கூட தெரிவிப்பேன் என கூறினார்.

திமுக ஆட்சி அமைப்பது என்பது பகல் கனவு எனவும், அது கானல் நீராகத்தான் போகும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதேபோல் சீமான் எம்.ஜி.ஆர் வரலாற்றை தெரியாமல் பேசுகிறார் என்றும், வாழும் சகாப்தமாக எம்.ஜி.ஆர் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அவரை தொட்டான் அவன் கெட்டான் எனவும் பேசியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் கைது!

Jeba Arul Robinson

அரசு தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு மாநகராட்சி பேருந்துகளில் சலுகை

Halley karthi

செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

Vandhana

Leave a Reply