சிவகங்கையில் 4 முறை ஒத்திவைக்கப்பட்ட மாவட்ட சேர்மன் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார்.
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 16 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் 8 இடங்களை அதிமுகவும் 6 இடங்களை திமுகவும் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 2 இடங்களையும் பிடித்து சமபலத்தை பெற்றிருந்தது. தொடர்ந்து மூன்றுமுறை பெரும்பான்மை நிரூபிக்கப்படாததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை அறிவுறுத்தல்படி இன்று நடைபெற்ற சேர்மன் மறைமுக தேர்தலிலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட பொன்மணி பாஸ்கரும், திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்குமாரும் சமமான வாக்குகளை பெற்றனர். இதனை தொடர்ந்து குலுக்கல் சீட்டு முறையில் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த பொன்மணி பாஸ்கர் வெற்றிபெற்றார்.