அதிமுகவின் இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரை ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் இன்று தொடங்குகிறது.
2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 19ஆம் தேதி எடப்பாடி தொகுதியில் அதிமுகவின் முதற்கட்ட பரப்புரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். இதைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் பரப்புரை மேற்கொண்டனர். இந்த நிலையில், அதிமுகவின் இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரை இன்று தொடங்கி ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ”வெற்றிநடை போடும் தமிழகம்” என்ற பெயரிl, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொள்கிறார். இதில், அரசின் சாதனைகளை ரிப்போர்ட் கார்டு வடிவில் அச்சிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்