தகவல் தொடர்பு சேவைக்காக பிஎஸ்எல்வி – சி 50 ரக ராக்கெட் அதிநவீன CMS -01 செயற்கைக்கோளுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சரியாக 03.41 மணிக்கு ராக்கெர் விண்ணில் பாய்ந்தது. பின்னர் திட்டமிட்டபடி புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
CMS-01 :
CMS-01 என்பது அதிர்வெண் ஸ்பெக்ட்ரமின் விரிவாக்கப்பட்ட-சி பேண்டில் சேவைகளை வழங்குவதற்காக திட்டமிடப்பட்ட ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோள். விரிவாக்கப்பட்ட-சி பேண்ட் கவரேஜில் இந்திய நிலப்பரப்பு, அந்தமான்-நிக்கோபார் மற்றும் லட்சத்தீவு தீவுகள் ஆகியவை அடங்கும். மேலும் கல்வி, மருத்துவம்,பேரிடர் மேலாண்மை,சி-பாண்டு ஆகிய பணிகளுக்குத் தேவையான தரவுகளை பெறுவதற்காக இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது.
இந்திய நிலப்பரப்பு மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் செல்போன் மற்றும் தகவல் தொடர்பு சேவையை இந்த செயற்கைக்கோள் மேம்படுத்த உதவும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் 22 வது திட்டம் இந்த பி.எஸ்.எல்.வி சி – 50. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும் 77வது விமானம் இதுவாகும்.