அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த சென்னை ஐஐடி மீண்டும் திறக்கப்பட்டு இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றன. முறையான கொரோனா வழிமுறைகளை மாணவர்கள் பின்பற்றாததால் 100க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதியானது. இதன் எதிரொலியாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 700 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதற்கட்டமாக இன்று மட்டும் 200 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும், நிலைமை கட்டுக்குள் இருப்பதால் பெற்றோர்களும் அச்சப்பட தேவையில்லை என்றும் கிண்டி பொறியியல் கல்லூரியின் முதல்வர் இனியன் தெரிவித்துள்ளார்.