முக்கியச் செய்திகள் சினிமா

அண்ணாத்த படப்பிடிப்பை வேகமாக முடித்துக் கொடுக்க ரஜினி திட்டம்!

நடிகர் ரஜினிகாந்த், அண்ணாத்த படப்பிடிப்பை வேகமாக முடித்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட இழுபறிக்கு பின்னர் அடுத்தாண்டு ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கப்படும் என ரஜினிகாந்த் அண்மையில் அறிவித்தார். அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரில் உள்ள தனது அண்ணன் சத்யநாராயணவை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனிடையே, அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்கான அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக ரஜினி நேற்று சென்னையில் இருந்து பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். அண்ணன் வீட்டில் தங்கிய ரஜினிகாந்த், தனது பிறந்தநாளை அவருடன் கொண்டாடவுள்ளார்.

அதன் பிறகு, டிசம்பர் 15ம் தேதி புறப்பட்டு ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாத இறுதியில் சென்னை திரும்பும் ரஜினிகாந்த் டிசம்பர் 31ம் தேதி கட்சி தொடங்கும் தேதியை அறிவிக்க உள்ளார். அரசியல் வேலைகள் சூடுபிடித்துள்ள நிலையில், அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை வேகமாக முடித்துக் கொடுக்க ரஜினி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘அதிமுகவை விமர்சிப்பது சர்வாதிகார போக்கின் உச்சம்’ – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Arivazhagan Chinnasamy

தொழிலாளி கல்லால் அடித்து கொலை

Halley Karthik

மின் கட்டண உயர்வால் சிறு-குறு தொழிற்சாலைகள் பாதிக்கும்-வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

Web Editor

Leave a Reply