முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

அண்ணாத்த படப்பிடிப்பு: ஐதராபாத் புறப்பட்டார் ரஜினி!

அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டு சென்றார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் அண்ணாத்த. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஐதராபாத்தில் வரும் 15ம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. படப்பிடிப்பில் பங்கேற்க ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் தனி விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், அண்ணாத்த படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு 25 நாட்கள் கழித்து சென்னை திரும்புவேன் என்று தெரிவித்தார். தனி விமானத்தில் படத்தின் படத்தின் கதாநாயகி நயன்தாரா மற்றும் படக்குழுவினர் 14 பேர் உடன் பயணித்தனர்.

Advertisement:
SHARE

Related posts

சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவர் போக்சோவில் கைது

Saravana Kumar

கஜகஸ்தானில் துப்பாக்கிச் சூடு; போலீசார் உட்பட 5 பேர் உயிரிழப்பு

Saravana Kumar

பழனி ரோப் கார் காலதாமதம் ஆனதற்கு கடந்த அதிமுக அரசே காரணம்: அமைச்சர் சேகர்பாபு

Vandhana

Leave a Reply