கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், செஸ் (Chess) அகாடமி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
செஸ் விளையாட்டில் தனது திறமையை உலகளவில் நிரூபித்தவர் விஸ்வநாதன் ஆனந்த். கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்துக்கும் சொந்தக்காரரானார். இதுவரை ஐந்து முறை செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இந்நிலையில் அவர் WestBridge Capital நிறுவனத்துடன் இணைந்து குழந்தைகளுக்கான செஸ் அகாடமி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா பாதிப்பு காரணமாக ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை விஸ்வநாதன் ஆனந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அவர்களுக்கு தேவையான பயிற்சி கொடுத்து வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அகாடமியில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் விஸ்வநாதன் ஆனந்தின் கண்காணிப்பில் கீழ் பயிற்சி பெறுவார்கள். அடுத்த விஸ்வநாதன் ஆனந்த் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சிதான் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.