அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் ஏழை நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 16 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனிடையே நோய் பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளன. இதில் உலக நாடுகள் அனைத்திற்கும் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் வகையில் உலக சுகாதார அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ஏழை நாடுகளுக்கு அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ஐநாவின் கொரோனா தடுப்பு மருந்து கூட்டமைப்பு சுமார் 200 கோடி டோஸ் தடுப்பு மருந்துகளை பல்வேறு தடுப்பு மருந்து நிறுவனங்களிடம் இருந்து பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் முதல் மருந்து விநியோகம் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.