இந்தியா

அடுத்த ஆண்டு அகஸ்ட் மாதத்திற்குள் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்புமருந்து; சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்!

மத்திய அரசின் திட்டத்தின் படி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகளை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் நோய் பரவலை தடுக்கும் வகையில் கொரோனா பரிசோதனையையும் அரசு துரிதப்படுத்தியுள்ளதோடு கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், அடுத்த ஆண்டின் முதல் 3-4 மாதங்களில், நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் ஜூலை-ஆகஸ்ட் மாதத்திற்குள், சுமார் 25 முதல் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் முககவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். எனெனில் இது ஆரோக்யத்திற்கு முக்கியமானவை என தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

24 வருடத்துக்குப் பிறகு திறக்கப்பட்ட லிஃப்டில் மனித எலும்புக்கூடு!

Ezhilarasan

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு நடைமுறைகள்: நான்கு மாநிலங்களில் ஒத்திகை!

Jayapriya

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1.2 கோடியாக உயர்வு!

Halley Karthik

Leave a Reply