அடுத்த ஆண்டில் ஜியோ 5ஜி அறிமுகம் செய்யப்படும் என முகேஷ் அம்பானி தகவல் தெரிவித்துள்ளார்.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக திகழ்பவர் முகேஷ் அம்பானி. கொரோனா காலத்தில் ஏராளமான நிறுவனங்கள் சரிவை சந்தித்த போதும், அவரது ரிலையன்ஸ் ஜியோவில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. தொலைத்தொடர்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்தவகையில் ஜியோ 5ஜி தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் 5ஜி அறிமுகம் செய்வதற்கான வேலையை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இதன் விலையும் குறைவாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
2020ல் இதற்கான சோதனை முயற்சிகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக காலதாமதம் ஏற்பட்டது. 5ஜி ஸ்பெக்ட்ரம் விலை அதிகமாக இருந்தால் ஏர்டெல் அதனை ஏலத்தில் எடுக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.