முக்கியச் செய்திகள் இந்தியா

அச்சுறுத்தும் கொரோனா: கேரளாவில் முழு ஊரடங்கு

கேரளாவில் ஜூலை 24 மற்றும் 25 என இரு நாட்களுக்கு முழு ஊடரங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து குறையத் தொடங்கியுள்ளன. ஆனால், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனையடுத்து பாதிப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது கேரளாவில் ஜூலை 24 மற்றும் 25 என இரு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து பேரிடர் மேலாண்மை வாரியம் விடுத்துள்ள அறிவிப்பில், “கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஜூலை 24 மற்றும் 25 என இரு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதற்கான கட்டுப்பாடுகள் 22ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 23ம் தேதியான வெள்ளிக்கிழமையன்று மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. இதில் 3 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மாவட்ட வாரியக 7 நாட்கள் தினசரி பாதிப்பானது 10%ஆக அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கொரோனா பாதிப்புகளைத் தொடர்ந்து, ஜிகா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 41 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 18 முதல் 20 வரை மாநிலம் முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் அனைத்து வகையான கடைகளும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

காவல்துறையினருக்கு ஊக்கத் தொகை வழங்க முதல்வர் ரூ.58.59 கோடி ஒதுக்கீடு

Halley karthi

’அண்ணாத்த’ படப்பிடிப்பு முடிந்தது: சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்!

Halley karthi

மு.க.ஸ்டாலினுக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து!

Jeba Arul Robinson