இந்தியா

அசுத்தமான நீரால் பறிபோன உயிர்கள்; பீகாரில் சோக சம்பவம்!

பீகாரில் அசுத்தமான நீரை பருகிய 3 சிறுவர், சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுன்ஹட்டா கிராமத்தில் சேர்ந்த மக்கள் சென்னாரி வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் வேலை செய்து வருகின்றனர். இதற்காக அவர்களுக்கு நீர்நிலைகளுக்கு அருகிலேயே முகாம்களும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வேலை முடித்து கிராமத்திற்கு திரும்பிய அவர்களுக்கு உடல்நல கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தக் கிராமத்தை சேர்ந்த சிறுவர், சிறுமியர் 3 பேர் அசுத்தமான நீரை பருகியதால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 50க்கும் அதிகமானோர் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில் 18 பேருக்கு மலேரியா பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வசித்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். அசுத்தமான நீரை பருகியதே இந்த நிலைக்கு காரணம் என முதல்கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆக்ஸிஜன் ஆலைகளை நிறுவ மத்திய அரசு உத்தரவு!

Halley Karthik

மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவுடன் 3-ம் கட்ட தேர்தல் நிறைவு!

Gayathri Venkatesan

சத்தீஷ்கர் எக்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து

G SaravanaKumar

Leave a Reply