முக்கியச் செய்திகள் இந்தியா

அசாம் போடோலாந்து பிராந்திய கவுன்சில் தேர்தலில் ஆதாயமடைந்த பாஜக!

அசாம் மாநிலத்தின் Kokrajhar, Chirang, Baksa, Udalguri ஆகிய 4 மாவட்ட பகுதிகளை உள்ளடக்கி 2003ல் உருவாக்கப்பட்டது BTC எனப்படும் போடோலாந்து பிராந்திய கவுன்சில். இது தன்னாட்சி அதிகாரம் பெற்றதாகும்.

கடந்த ஏப்ரல் மாதத்துடன் இந்த கவுன்சிலின் பதவிக்காலம் நிறைவு பெற்ற நிலையில் கொரோனா காரணமாக இதன் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மொத்தம் 40 இடங்களுக்கான இத்தேர்தலில் பாஜகவும், ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசின் சக கட்சியான BPF-ம் தனித்தனியாக போட்டியிட்டன. மேலும் UPPL, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கோதாவில் இறங்கின.

ஒரு இடத்தில் காங்கிரஸ் வெற்றி:

இந்நிலையில் இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் BPF 17 இடங்களையும், UPPL 12 இடங்களையும், பாஜக 9 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஒரு இடத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு அசாம் மாநில சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இத்தேர்தல் செமி ஃபைனல் மேட்ச்சாக கருதப்படுகிறது. மெஜாரிட்டிக்கு 21 இடங்கள் தேவை என்ற நிலையில் எந்தக் கட்சியும் மெஜாரிட்டி பெறவில்லை. இதன் மூலம் அங்கு கூட்டணி அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. UPPL மற்றும் பாஜக என இரண்டும் இணைந்து அங்கு அதிகாரத்தை கைப்பற்ற இருப்பது தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சரிவில் இருந்து மீண்ட இந்திய பங்கு சந்தை

G SaravanaKumar

8 வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு – குற்றவாளிக்கு ஆயுள் தண்டணை

EZHILARASAN D

மலைக்கிராமங்களுக்கு மருத்துவ சேவைகள் – அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

EZHILARASAN D

Leave a Reply