முக்கியச் செய்திகள் தமிழகம்

அக்காவுக்கு முக்கியத்துவம் கொடுத்த குடும்பத்தினர்; மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட தங்கை!

கொரட்டூரில் அக்காவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் மனஉளைச்சலுக்கு ஆளான தங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை கொரட்டூர் பழைய தபால்பெட்டி தெருவில் வசித்து வரும் சண்முகம் என்பவரின் மகள் ரேவதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ரேவதிக்கு குடும்பத்தில் உள்ளவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை எனவும் இதனால் மன உளைச்சலில் இருந்த ரேவதி வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மூன்று பக்க கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அதில் தன் அக்காவிற்கு மட்டும் குடும்பத்தினர் முக்கியத்துவம் தருவதாகவும், தான் கூறும் எதையும் அம்மா அப்பா கேட்கவில்லை எனவும், இதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் எழுதியுள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கொரட்டூர் காவல்துறையினர் ரேவதியின் தந்தை சண்முகத்திடம் விசாரணை செய்த போது கடந்த 2012ஆம் ஆண்டு இதே போன்று தற்கொலைக்கு முயன்றதாகவும் அதன் பின்னர் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கடவுளின் தேசத்திலும் கல்லா கட்டும் “விக்ரம்”

Web Editor

பனாமா பேப்பர்ஸ் வழக்கு – ஆஜரானார் ஐஸ்வர்யா ராய்

Halley Karthik

முதன்முறையாக இந்தி சினிமாவில் அறிமுகமாகிறார் சமந்தா

Halley Karthik

Leave a Reply