ஃபைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
கொரோனாவால் உலக நாடுகள் கடுமையாக அவதிப்பட்டு வரும் சூழலில், அதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் மற்றும் ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனம் இணைந்து ஒரு தடுப்பூசியை தயாரித்துள்ளன. இதற்கு இங்கிலாந்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளன. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி அளிக்குமாறு அந்நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ஃபைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் நீண்ட நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதல்கட்டமாக இதனை செலுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க அறிவியல் சாதனைகளில் இதுவும் ஒன்று என ட்ரம்ப் பாராட்டியுள்ளார். சில நாட்களில் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.